மாளிகாவத்தை பிரதேசத்தின் புகையிரத குடியிருப்பு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேரந்த 22 வயதான சந்தேகநபரிடம் இருந்து 1.10 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.