சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தது.
ஆனா அந்த பாடல் படத்தில் இடம்பெறாது என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கி இருந்தது.
ஆனால் எப்படியோ படக்குழுவினர் தள்ளிப் போகாதே என்ற ஹிட் பாடலை அண்மையில் பல்கேரியாவில் படமாக்கினர். தற்போது இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.
இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், படத்தில் சிம்புவின் நடிப்பை பாராட்டி நன்றி கூறியுள்ளார். அதோடு படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.