தண்டனை வழங்க பயன்படுத்தப்பட்ட உலகின் கொடூர கூண்டுகள்!

299

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்த கொடூர கூண்டுகள் கொண்ட கட்டிடம் அந்நாட்டு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Fallujah நகரில் இந்த மாதம் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில், ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இந்த நகரம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் வடிவமைக்கப்பட்டுள்ள மணிக்கூண்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஐஎஸ் தீவிரவாதிகள் குற்றம் செய்யும் நபர்களை இந்த மணிக்கூண்டுகளில் தான் அடைத்து வைத்துள்ளனர்.

இந்த மணிக்கூண்டுகள் வெவ்வேறு வடிவத்தில் உள்ளன, மேலும் இந்த கட்டிடத்திலேயே நீதிமன்றம் அமைத்துள்ளனர். இதில் நீதிபதி மற்றும் தீவிரவாதிகளுக்குள் நியமக்கப்பட்ட அதிகாரிகள் அமருவதற்கும் இருக்கைகள் உள்ளன.

குற்றம் செய்யும் நபர்கள் இந்த கூண்டுக்குள் அடைக்கப்பட்டால், அவர்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும் அல்லது மண்டியிட்டிருக்க வேண்டும், உட்காரவோ படுக்கவோ கூடாது. அதற்கேற்ற வகையில் இந்த கொடூர கூண்டுகளை வடிமைத்துள்ளனர்.

SHARE