வவுனியா, ஓமந்தையில் பெண்களால் அடித்து நொறுக்கப்பட்ட கள்ளுத் தவறணை

255

வவுனியா ஓமந்தை நவ்வி கிராமத்தில் கள்ளுத் தவறணை ஒன்று பிரதேச பெண்களால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா ஓமந்தை பாலமோட்டை கிராம சேவையாளர் பிரிவில் பாடசாலை மற்றும் சமயவழிபாட்டுத் தலங்களுக்கு அருகே காணப்பட்ட கள்ளுத் ததவறணையே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டது.

பொதுமக்கள் பலமுறை உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லையென குற்றஞ்சாட்டியே பிரதேச மக்கள் இதன் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.vauneja

SHARE