பிரித்தானிய பத்திரிகையாளருக்கு தங்க மகன் மாரியப்பன் அம்மாவை உதாரணமாக கூறிய சேவாக்

262

பாரா ஒலிம்பிக்கில் இந்திய சார்பில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவின், அம்மாவை சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியிம் இந்தியா சார்பில் சிந்து வெள்ளியும், சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கமும் வென்று அசத்தினர்.

இவர்களுக்கு இந்திய சார்பில் வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்தன. இதை பிரித்தானிய பத்திரிக்கையாளர் மோர்கன் இரண்டு பதக்கம் வென்றதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை எனவும் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வதற்குள், இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலகக்கிண்ணத்தை வென்று விடும் என கருத்து தெரிவித்திருந்தார்.

Saroja,mother of Mariyappan is a vegetable seller,it’s a slap on ppl givng excuse of family condtn fr picking up gun

தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் நாங்கள் தங்கம் வென்று விட்டோம், நீங்கள் எப்போது உலகக்கிண்ணம் வெல்லப் போகிறீர்கள் என சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தாயார் சரோஜா காய்கறி வியாபாரம் செய்பவர் எனவும். அவர் அளித்த ஊக்கம் தான் தற்போது மாரியப்பன் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் என கூறியுள்ளார்.

இதற்கு வாழ்த்து தெரிவித்த மோர்கனுக்கு உங்கள் வாழ்த்துக்கள் எல்லாம் போதும் முதலில் நீங்கள் கிரிக்கெட் போட்டியில் உலகக்கிண்ணம் வெல்ல பாருங்கள் என கிண்டலாக கூறியுள்ளார்.

SHARE