சுவிட்ஸர்லாந்தில் வாழும் இலங்கையர்களுக்கு சுவிஸ் அரசு வைத்த ஆப்பு..!! என்ன தெரியுமா…?

258

அரசியல் தஞ்சம் கோரி சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்தியா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்து நீலநிற கடவுச்சீட்டை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கடந்த காலங்களில் நீலநிற கடவுச்சீட்டை வைத்திருந்த சில இலங்கையர்கள் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குச் சென்றமைக்கான ஆதாரங்கள் சுவிட்ஸர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் இருக்கின்றது.

இதன்படி அரசியல் தஞ்சம் கோரி ஒருவர் சுவிட்ஸர்லாந்து நாட்டிற்குள் வந்தால் அந்த நாட்டில் சுமூகமான நிலை ஏற்படும் வரை நாட்டிற்கு திரும்ப முடியாது என்பதை நீலநிற கடவுச்சீட்டு வைத்திருக்கும் அரசியல் தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை சிலர் மீறிச் சென்றதனாலேயே தற்போது நீலநிற கடவுச்சீட்டு வைத்திருக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் இந்தியாவிற்கான பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.

இவ்விவகாரத்தால் எதிர்காலத்தில் பாரிய சவால்களை நிலநிற கடவுச்சீட்டு வைத்திருப்போர் எதிர்நோக்கவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த விடயத்தை சுவிட்ஸர்லாந்தில் உள்ள இந்தியத் துாதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.awice_passpor

SHARE