மரண தண்டனை கைதி துமிந்தவை சிறையில் சந்தித்த நாமல் ராஜபக்ச!

282

namal-rajapaksa

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை நாமல் வெலிக்கடை சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியின் அலுவலகத்தில் துமிந்த சில்வா மற்றும் நாமல் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷவுடன் காமினி லொக்குகேவும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE