மஞ்சள் கடவையில் பாதையை கடந்து சென்ற இளைஞன் மீது முச்சக்கரவண்டி மோதுண்டதில் காயமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அட்டன் நகர பிரதான வீதியிலுள்ள மஞ்சள் கடவையிலே 14.09.2016 காலை 9 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது.
மஸ்கெலியா பகுதியிருந்து அதிக வேகமாக வந்த முச்சக்கரவண்டி மஞ்சள் கடவையில் சென்ற இளைஞன் மீது மோதுண்ட நிலையில் காயமுற்ற இளைஞன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியின் சாரதியை அட்டன் போலிஸார் கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணை தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்


