பெண்களை விட ஆண்களுக்கே தற்காலத்தில் பாதுகாப்பு அவசியம்!

278

be-safe

பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கே தற்காலத்தில் பாதுகாப்பு அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது பெண் பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகளே அதிகமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை,, ஆண் பிள்ளைகளே அதிகம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என பெண்கள் மற்றும் சிறுவர் , பொது மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெண் பிள்ளைகளுக்கு அதிகமாக பாதுகாப்பை வழங்கும் நடைமுறையானது சமூகத்தில் வழக்கமாகியுள்ளதால் சமூகத்தில் பெண் பிள்ளைகள் மீது அதிகம் அவதானம் செலுத்தப்படுவதாகவும், இதன் காரணமாக ஆண் பிள்ளைகள் மீதான கவனம், பாதுகாப்பு குறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE