வைத்தியர்களின் ஓய்வு வயதை 63ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்.

229

lekar-55-615x318

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆகும். ஆனால் இதை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இதை கூறினார்.

மேலும், நாட்டில் தற்போது 1164 வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் இவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்போது உள்ள அனுபவமிக்க வைத்தியர்களின் ஓய்வூதிய வயதை மூன்று வருடங்கள் அதிகரிப்பதால் வைத்தியர்களுக்கு நிலவும் வெற்றிடங்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் ராஜித கூறினார்.

SHARE