பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை கைதியான தெமட்டகொட சமிந்த  கைதிக்கு மீண்டும் சிறைமாற்றம்!

246

coldematagoda-chaminda-5154717561_4738568_09092016_kaa

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை கைதியான தெமட்டகொட சமிந்த மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு தெமட்டகொட சமிந்த அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், தெமட்டகொட சமிந்தவிற்கு எதிரான வழக்குகள் பல உயர்நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், குறித்த வழக்குகளுக்கு சமிந்தவை ஆஜர்படுத்த வேண்டியிருப்பதாலும் போகம்பறை சிறைச்சாலையில் இருந்து சமிந்தவை அழைத்து வருவதில் காணப்படும் நடைமுறை சிக்கல்களை கவனத்திற் கொண்டும் இந்த சிறை மாற்றம் தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE