யாழில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த சட்டத்தரணி சர்மினி மல்லாகம் நீதிமன்றில் ஆயர்!

303

பொலிசாரால் தேடப்பட்டு வந்த பெண் சட்டத்தரணி சர்மினி மல்லாகம் நீதிமன்றில் ஆயர் மல்லாகம் நீதிமன்றப்பதிவாளரைத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்திய சட்டத்தரணி சர்மினியை 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில் செல்ல, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளார்.

யாழ்ப்பாண நீதித்துறை வரலாற்றில் சட்டத்தரணிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பின்னர் அவர், பிறிதொரு சட்டத்தரணியூடான மன்றில் இன்று ஆஜராகிப் பிணை கோரிய முதலாவது சம்பவமாக இது அமைந்துள்ளது.

மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரைத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியதாகச் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, சட்டத்தரணி சர்மினிக்கு எதிராக தெல்லிப்பழை காவல்துறையினரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் அடிப்படையில் மிரட்டியதாகக் கூறப்படும், சட்டத்தரணிக்கு எதிராக கடந்த 2ஆம் திகதி மல்லாகம் நீதவானால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் , சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல் , தலையீடு செய்தால் பிணை இரத்து செய்யப்பட்டு, சட்டத்தரணி ,விளக்கமறியலில் வைக்கப்பட்டே வழக்கு விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் நீதிவான் தெரிவித்தார்.

தலைமறைவாக இருந்த சர்மினியை பொலிசார் மட்டுமல்லாது ரவுடிகள் தேடி வந்துள்ளனர். ரவுடிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிடும் சர்மினி இவர்களிடம் இருந்து பெருமளவு பணத்தை சுருட்டிக் கொண்டு வாதிட்டாலும் நீதிபதிகள் இவர் வாதிடும் வழக்குகளுக்கு வரும் சந்தேகநபர்களை சிறைக்கு அனுப்புவதையே வழமையாகக் கொண்டிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.

வழக்குகளில் இவர் சரியான முறையில் வாதாடமாட்டார் எனவும் இதனால் சர்மினியிடம் வழக்குக்காக போவதை ஏராளமானவர்கள் நிறுத்திவிட்டதாகவும் தெரியவருகின்றது.sarmene01

SHARE