தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியை வீழ்த்தியது தூத்துக்குடி அணி

248

625-500-560-350-160-300-053-800-748-160-70-6

தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டி முதல் முதலாக தமிழகத்தில் நடத்தப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று நடந்த 27 வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் – மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர் கொண்டது.

இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதை தேர்ந்தெடுத்தது.

இதைத் தொடர்ந்து, முதலில் களமிறங்கிய தூத்துக்குடி அணியின் தொடக்க வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 167 ஓட்டங்கள் பெற்று மதுரை அணிக்கு 168 ஓட்டங்களை வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது.

இதைத் தொடர்ந்து, இரண்டாவதாக களமிறங்கிய மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் சேர்த்து 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதன் மூலம் தூத்துக்குடி அணி அதிரடியாக வெற்றி இலக்கை தட்டிச் சென்றது.

SHARE