இரட்டைக்கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டி வீதியில் இறங்கிய பொது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

268

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்குமாறு கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏறாவூர் பள்ளிவாசலுக்கு முன்பாக நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது.

ஏறாவூர் சமூகசேவை அமைப்பு, பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் ஏற்பாட்டில் இக்கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்ட தாயான நூர்முஹம்மது ஹுஸைரா (56) மற்றும் அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணு (32) ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1

தாயினதும் மகளினதும் உடற்பாகங்கள் மற்றும் இரத்த மாதிரி இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்பு இரசாயானப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிக்கை 3 வாரகாலத்துக்குள் கிடைக்குமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, பலகையொன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டனர்.

குறித்த கொலைகளை கண்டித்தும் துக்கம் அனுஷ்டிக்கும் வகையிலும் மேற்படி பிரதேசத்திலுள்ள தெருக்கடைகளில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன், அப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் ‘கண்ணீருடன் ஏறாவூர்’, ‘ஆழ்ந்த துயரத்தில் ஏறாவூர்’ போன்ற அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

625-0-560-320-160-600-053-800-668-160-90

SHARE