பலத்த காற்றால் குழம்பிபோன திருமண வைபோகம்

894

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

அமெரிக்காவில் புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், உற்றார் உறவினர்கள் புடைசூழ திருமண வைபோக நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கர காற்று வீசியதில் மரக்கிளை உடைந்து கீழே விழுந்ததில் அனைவரும் ஆபத்தில் இருந்து தப்பியுள்ளனர்.

Kentucky மாநிலத்தின் Lexington நகரில் வைத்து வெளிப்புறமாக இந்த திருமண வைபோகம் நடைபெற்றுள்ளது.

மரங்கள் மற்றும் செடி கொடிகள் நிறைந்த வெட்டவெளி இடத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று கூடியிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியதில், மரக்கிளைகள் ஆட்டம் கண்டன, இதில் ஒரு மரத்தின் கிளையானது மணமக்களின் மேலே விழுவதற்கு முன்னர், அங்கிருந்த ஓடிய மணமகள் இடறி கீழே விழுந்துள்ளார்.

அதன் பின்னர் உறவினர்கள் சேர்ந்து அவரை தூக்கிவிட்டனர், மேலும் எஞ்சிய நபர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர், இதில் யாருக்கும் எவ்வித ஆபத்து ஏற்படவில்லை என்றபோதிலும், இது ஒரு நகைச்சுவையான சம்பவமாகவும் உள்ளது என மணமக்கள் கூறியுள்ளனர்.

இதனால், திருமண சடங்கினை மீண்டும் ஒரு நாள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் என கூறியுள்ள இவர்கள் தற்போது அயர்லாந்தல் தேனிலவு கொண்டாடி வருகின்றனர்.

SHARE