பத்தகிரியவின் இளைஞர் பொலிஸ் காவலில் இருந்து காணாமல் போன விடயத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

250

ranil-unp

ஹம்பாந்தோட்டை, பத்தகிரியவின் இளைஞர் பொலிஸ் காவலில் இருந்து காணாமல் போன விடயத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு துறையினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, உரிய பணிப்புரைகளை குற்றப்புலனாய்வு துறையினருக்கு வழங்கியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி உரையாற்றவிருக்கின்ற நிலையில் அரசாங்கத்துக்கு சங்கட நிலையை ஏற்படுத்துவதற்காகவே இந்த காணாமல் போன சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்று திக்வெலயில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட குறித்த இளைஞர் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

SHARE