
புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஸல் கபில ஜயம்பதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
குறித்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
புதிய விமானப்படை தளபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதியை எயார் மார்ஸல் கபில ஜயம்பதி சந்தித்துள்ளார்.
மேலும், இந்த சந்திப்பின் போது விமானப்படை தளபதி ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் ஒன்றையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.