பதுளை – ஹாலி – எல பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 16 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மதுபோதையில் வந்து தனது தாயை தாக்கியதன் காரணமாக ஆத்திரமடைந்த மகன் தந்தையை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த 41 வயதான தந்தை, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதுடன் வீட்டுக்கு அருகில் விழுந்து இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சந்தேக நபரான மகன் இன்று பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக ஹாலி-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மதுபோதையில் வீட்டுக்கு வந்து தந்தையை தாக்கி கொலை செய்த சந்தேக நபர் மாதம்பை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தில் பணியாற்றி விலகிச் சென்றவர் என தெரியவந்துள்ளது.
மது அருந்தி போதையில் வீட்டுக்கு வந்த இந்த நபர் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் பின்னர் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த தந்தை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளதுடன் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.