பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேகக் கைதி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

229

புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் வயது 28 என்ற இளைஞன் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் குற்றச்செயல் ஒன்றின் காரணமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அந்த வழக்கிற்கு குறித்த நேரத்திற்கு சழூகம் அளிக்காதால் நிதீமன்றினால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் படி 17.09.2016 இரவு 7.30 மணியளவில் புஸ்ஸல்லாவ பொலிஸாரினால்  புஸ்ஸல்லாவ நகரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யபட்ட நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் வரை புஸ்ஸல்லாவ பொலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்த வேளையில் சந்தேக நபர் தனது ரீசேட்டை பயன்படுத்தி சிறை கதவு கம்பின் மூலம் தூக்கில் தொங்கியுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இடையில் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போது மேலதிக விசாணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.  பிரேத பரிசோதனைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு இடையில் கடந்த (17) பகல் 12 மணிமுதல் 3.00 மணிவரை சுமார் 1000 தோட்ட தொழிலாளர்கள் கண்டி நுவரெலியா பிரதான பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரிளை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும், பிரச்சினைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறும், நடைபெற்றது தற்கொலை அல்ல கொலை அதற்து நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காததனால் போராட்டம் 03.00 மனிவரை நீடித்தது. இதன் நிமித்தம் இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அமைச்சர் பழனி திகாம்பரம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் சம்பவ இடத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு மக்களின் கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இந்த கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தற்கு இணங்க இவற்றை பழனி திகாம்பரம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகிய இருவரும் மக்களிடம் எடுத்து கூறியதற்கு இணங்க ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு மக்கள் கலைந்துசென்றனர். 4 அடி உயரமான கதவில் 06அடி மனிதன் தூக்கில் தொங்கியதில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புஸ்ஸல்லாவ இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
இன்று (19) மாலை 3.00 மணியளவில் நல்லடக்கம் – ஆர்ப்பாட்டங்களுக்கு தடை
இந்நிலையில் ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கம்பளை பதில் நீதவான சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் நிலையத்திற்கும் வைத்தியசாலை பிரேத அறைக்கும் சென்று பிரேதத்தை பேராதெனிய சட்ட வைத்திய நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்புமாறு பனித்திருந்தார். அதன் படி பிரேதம் பரிசோதித்ததன் பின் உடற்பாகங்கள் கொழும்பிற்கு அனுப்பட்டது. பிரேதம் உவினர்களிடம் கடந்த (18) இரவு கையளிக்கபட்டுள்ளது. இன்று (19) பி.ப 3.00 மணியளவில் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட  இருவர் தற்காலிக பணி இடை நிறுத்தத்திற்கு உள்வாங்கபட்டுள்ளனர். பிரேதம் நல்லடக்கம் செய்யும் முன்னரோ அதற்கு பின்னரோ போராட்டங்கள் நடாத்த முடியாது. அதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தகவலும் படங்களும்:- பா.திருஞானம்

unnamed

unnamed

unnamed-3

unnamed-4

unnamed-5

unnamed-9

unnamed-10

unnamed-7

unnamed-8

 

SHARE