15 வயது பாடசாலை மாணவியை துஸ்பிரயோகப்படுத்திய 25 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வலஸ்முல்ல-போவல பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
மேலும், பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் படுத்திய நபர் ஒரு குழந்தையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் தங்கல்ல பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றித்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தங்கல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.