விக்ரம், விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் விக்ரமின் இருமுகன் படம் திரைக்கு வந்தது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விக்ரம் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அப்போது பல ரசிகர்கள் இவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
மேலும், எப்போது மலையாளத்தில் நேரடியாக நடிப்பீர்கள் என கேட்டு ரசிகர்கள் கூச்சலிட, விக்ரம் சிறிது நேரம் யோசித்தார்.
பிறகு அவர், சரி இதை நான் விஜய் ஸ்டைலில் சொல்கிறேன், “ஐயம் வெயிட்டிங்” என்று கூற, அரங்கமே அதிர்ந்தது.