இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ், பொறாமை பிடித்த வீரர்கள் சிலர் தனது புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
சானியா மிர்சா, மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோருடன் நீண்ட காலமாக பயஸுக்கு கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
சமீபத்தில் சானியா, விஷத்தன்மை வாய்ந்த நபரை வெல்வதற்கு ஒரே வழி, அவர்களுடன் விளையாடாமல் இருப்பதுதான் என்று லியாண்டர் பயஸ் கருத்துக்கு காட்டமாக டுவிட்டரில் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் பயஸ் கூறியதாவது, நான் சாதித்ததை நினைத்து எனது போட்டியாளர்கள் சிலர் பொறாமைப்படுகிறார்கள். என்னைப் போல் அவர்களால் சாதிக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் எனது புகழை அழித்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.
எனக்கு எதிராக பேசுபவர்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை. டென்னிஸில் சாதிப்பதற்கான வேலைகளில் மட்டுமே ஈடுபடுகிறேன். வரலாற்று புத்தகத்தில் எனது பெயரை எழுத வேண்டும் என்பதிலேயே நான் கவனம் செலுத்துகிறேன்.
நவீன உலகின் வெளிச்சத்தில் வாழ்வதால் அனைவருமே ஹீரோவாக வேண்டும் என விரும்புகிறார்கள். சிலர் வசைபாடுகிறார்கள். அவர்கள் வசைபாடட்டும். அதனால் அவர்கள்தான் மோசமானவர்களாக தெரிவார்கள்.
ஜூனியர்கள் வந்து என்னை வீழ்த்தும் வரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என கூறியுள்ளார்.