அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூனியர்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. pistol, rifle, shotgun ஆகிய பிரிவுகளில் அசர்பைஜான் நாட்டில் நடைபெற்ற இந்தப்போட்டிகளில் இந்திய வீரர் சுபான்கர் பிரணிக், 50 மீற்றர் rifle prone பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
மற்றொரு இந்திய வீரரான சாம்பாஜி பாட்டீல், 25 மீற்றர் standard pistol பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும் சாம்பாஜி, குர்மீத், ரிதுராஜ் ஆகியோர் அடங்கிய அணியும் தங்கப்பதக்கத்தை வென்றது.
வரும் 23-ஆம் திகதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் 27 நாடுகளைச் சேர்ந்த 279 போட்டியாளர்கள் 18 பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக இதே ஆண்டில் ஜேர்மணி நாட்டில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 4ஆம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.