அமெரிக்காவில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் பிரிவில் தங்கம் வென்றும் முதல்வரை சந்திக்கமுடியவில்லை என பிளாட்னி மாறனின் தாய் தனலட்சுமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு பிளாட்னி மாறன் என்ற மகன் உள்ளார்.
இவர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், என் மகன் 15 வயதில் இருந்தே சிறப்பு ஒலிம்பிக் பிரிவில் பங்கெற்று வருவதாகவும், அதில் பல பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளான் எனவும், தற்போது கூட அமெரிக்காவின் லாஸ் எஞ்சல்ஸில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் 100மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் தங்கமும், நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள என் மகனின் வளர்ச்சிக்காக தமிழக முதல்வரை பலமுறை சந்திக்க முயன்றும் முடியவில்லை என்றும் தன் மகன் ஆட்டிசம்நோயால் பதிக்கப்பட்டுள்ளான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தன் மகன் விளையாடச் செல்லும் ஒவ்வொரு மாநிலத்திற்கும், வட்டிக்கு பணம் வாங்கித்தான் அனுப்பியுள்ளேன் எனவும் வருத்தத்துடன் கூறியிருந்தார்.
நானும், என் மகனும் உங்களை சந்திப்பதற்காக காத்திருக்கிறோம் என புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.