வித்தியாவின் கொலை. 12 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

247

vithya

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் 12 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதற்கமைய குறித்த சந்தேகநபர்களை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். றியாழ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனினும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி ஆஜரானதுடன் பிரதிவாதிகள் சார்பில் எவரும் ஆஜராகவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் வித்தியாவின் தாயாரை மிரட்டிய சந்தேகநபருக்கும்எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE