அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஒருங்கிணைப்பாளரான சனத் பண்டார கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று கொழும்பில் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து கடந்த 31ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மாணவர்களை சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தினார்கள். இது தொடர்பான விசாரணைகளுக்காகவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஒருங்கிணைப்பாளர் அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட இவரை கைது செய்தமையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை தாம் முன்னெடுத்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தார்கள்.
மேலும், விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட சனத் பண்டார எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.