யாழில் இரத்தம் வடிந்த நிலையிலும் தொடர்ந்தும் மோதல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர் கூட்டம்!

237

28-1453981374-law-college-clash-2008-300x225

திருநெல்வேலி கலாசாலை வீதியில் இரவில் ஒன்று கூடும் இளைஞர்குழுக்களுக்கிடையில் அடிக்கடி முரண்பாடுகளும், சண்டைகளும்இடம்பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக தொடர் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த குழுக்கள் தாங்களுக்கிடையே மோதிக்கொண்டது மாத்திரமன்றி அருகிலுள்ள வீடுகளுக்கும் சென்று மோதலில் ஈடுபட்டு வீட்டிலுள்ள பொருட்களுக்கும் சேதம் விளைவித்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மோதலில் ஈடுபட்டவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வடிந்த நிலையிலும் அதனை கண்டுகொள்ளாமல் வீதிகளில் நின்று தொடர்ந்தும் மோதல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயத்திற்கு பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொண்டு தொடர்ந்து இடம் பெற்று வரும் மோதல்களை கட்டுப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE