தமன்னா நடிப்பை தாண்டி நடனத்தில் மிகவும் பிரபலம். தற்போது இவர் பிரபுதேவாவுடன் இணைந்து தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் தயாராகி இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் ஹிந்தி டைட்டில் டிராக்கை நேற்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நான் தமன்னாவின் தீவிர ரசிகை, அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன்.
தற்போது இந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.