வல்லப்பட்டைகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஹொங்கொங் நோக்கி செல்லவிருந்த விமானத்தில் பயணிக்கவிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 38 வயதானவர் என்றும், இவர் தொடர்பில் இலங்கை சுங்க அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து வல்லப்பட்டடைகளுடன், கொகுன் தொகையும் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி 10 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.