சரத் பொன்சேகா எழுதவுள்ள நூலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கமால் குணரத்ன

215

kamail-copy

விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக சகல இராணுவ அணியினருடனும் இணைந்து தனதுதலைமைத்துவத்தின் கீழ் யுத்தத்தை வெற்றி கொண்ட விதத்தினை எதிர்வரும்நாட்களில் புத்தகமாக எழுதி வெளியிடப் போவதாக அமைச்சரும், முன்னாள் இராணுவத்தளபதியுமானபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அமைச்சர் பொன்சேகாவினால் வெளியிடப்படவுள்ள குறித்த புத்தகத்திற்கு தனதுவாழத்துக்களை தெரிவிப்பதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவ புலனாய்வு உறுப்பினர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள்தொடர்பிலும் தான் மிகுந்த மனவருத்தம் அடைவதாகவும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலினைஅண்மையில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE