இன்று பிற்பகல் 2.30 மணியளவில் .யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் பொலிஸாருக்கும் யாழ்.விளையாட்டுக் கழகங்களுக்குமிடையே விளையாட்டு போட்டிகள் நடாத்தப்படவுள்ளது.
இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு யாழ் மாவட்ட பொலிசாருக்கும் தேர்வு செய்யப்பட்ட கழகங்களுக்குமிடையிலேயே போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட், காற்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் போன்ற போட்டிகள் நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக D.I.G சஞ்சீவ தர்மதாச கலந்துகொள்ளவுள்ளார்.