தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணியில் பங்குபெறப்போவதில்லை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பகிரங்க அறிவிப்பு!

232

mavai-965s
தமிழ் மக்கள்ப் பேரவையின் எழுக தமிழ் பேரணியில் ஏன் கலந்து கொள்ளவில்லையெனத் தினப்புயல் ஊடகம் மாவை சேனாதிராஜா அவர்களிடம் கேள்வியெழுப்பியதற்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் நாங்கள் அரசாங்கத்தோடும் சர்வதேச சமூகத்தோடும் ஒரு பேர்ச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற பொழுது அதனைக் குளப்பும் நோக்கில் இந்த எழுக தமிழ்ப் பேரணியானது அமையப்பெற்றுள்ளது. அது மட்டுமள்ளாது உள்ளுர்ப் பேர்ச்சுவார்த்தைகளும், சர்வதேச பேர்ச்சுவார்த்தைகளும் முறிவடைவதற்கு இந்த எழுச்சிப் பேரணி அமைவாக இருப்பதால் நாம் அதில் பங்கேற்கவில்லை. இதுவே முக்கிய காரணம் மற்றும் காணி சுவீகரிப்புக்கள், புத்தசிலை அமைத்தல், அரசியல் கைதிகள் விடுதலை போன்றவற்றை உள்ளடக்கி இந்த எழுச்சிப் பேரணி மேற்கொள்ளப்படுகின்றது. இதனை நாம் நிராகரிக்கவில்லை. அதனை நாம் வரவேற்கின்றோம்.
அரசியல் அமைப்புத் தொடர்பாக இரண்டு மாதங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அரசு கூறியிருக்கும் இந்தக் கட்டத்தில் அது தொடர்பாகவும் தமிழ் மக்கள் பேரவைக்கு நாம் அறிவித்திருக்கின்றோம். பல விடயங்களில் பல இனக்கப்பாடுகள் இருக்கின்றது. அதனைக் குழப்பிவிடக்கூடாது என்பதிலும் நாம் தெளிவாக இருக்கின்றோம். அண்மையில் பன்கீமூன் உடன் நடைபெற்ற பேச்சுவார்தையிலும் அரசாங்கத்தோடு ஒரு சமரசத்தை உருவாக்கிக் கொள்வதற்கு சர்வதேசத்தோடு இணைந்து செயற்பட சம்மதித்துள்ளோம். ஆனால் அரசாங்கம் விடுகின்ற பிழைகளையும,; அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படாத விடையங்கள் தொடர்பிலும் நாம் ஐக்கிய நாடுகள் சபைக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அப்படி இல்லாவிட்டால் ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராக நாம் போராட்டங்களை ஆரம்பிப்பதற்கு தள்ளப்பட்டால் அதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆகவே இந்தக்கட்டத்தில் நாம் அதில் கலந்து கொள்ளவில்லையே தவிர மக்கள் குரல் கொடுப்பதை நாம் ஆதரிக்கின்றோம். ஏனைய கட்சிகள் கட்சித் தலைவர்கள் இப் பேரணியில் பங்கேற்கின்ற பொழுது தமிழரசுக் கட்சி மட்டும் இப் பேரணியில் கலந்து கொள்ளாதது ஒரு குற்றச் செயலாக பார்க்கப்படும் அல்லவா எனக் கேள்வி எழுப்பியபோது அதற்குப் பதிலளித்த மாவை சேனாதிராஜா இல்லை அப்படி எந்தவொரு தாக்கத்தையும் எமக்கு ஏற்படுத்தப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE