இலங்கை கடற்படையினருக்கு திருகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை நிபுணர்கள், பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் வெடிபொருள் செயலிழப்பு தொழில்நுட்ப நிபுணர்களே இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
நீருக்கு அடியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடிப்பொருட்களை செயலிழக்கச்செய்யும்
வகையிலான பயிற்சிகளே வழங்கப்பட்டதாக அமெரிக்கத்தூதரகம் கூறியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முதல் செப்டம்பர் 6ஆம் திகதிவரையில் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, அமெரிக்கா பசுபிக் கட்டளையகத்தின் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளை இலங்கையின் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர்.
நீர் நிலைகளில் ஏற்படுகின்ற எண்ணெய் கசிவுகளில் இருந்து பாதுகாப்பு பெறும் பெறும் வகையில் இந்த பயிற்சிகள் அமைந்திருந்தன என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.