நாடாளுமன்ற உறுப்பினர் கேஹலிய ரம்புக்வெலியின் மகன் ரமித் ரம்புக்வெல கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 6.30 அளவில் கொழும்பு சுதந்திர சதுக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மது அருந்திய நிலையில் ரமித் ரம்புக்வெல. கார் ஒன்றை செலுத்திய அவர், மரம் ஒன்றில் மோதியுள்ளார்.
இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் ரமித், ஏற்கனவே வெளிநாட்டு சுற்றுலா ஒன்றின்போது விமானத்தின் அவசரக்கதவை திறக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.