பசிலுக்கு தொடரும் அதிர்ச்சி!  சொத்துக்களும் பறிமுதல்

205

basil

கடந்த ஆட்சியில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ளது.

இதன்கீழ் தேசிய அரசாங்கத்தின் கழுகு கண்ணில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளார். இவர்கள் கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களில் முதன்மையானவராக உள்ளார்.

இந்நிலையில் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதென கூறப்படும் கம்பஹா, மல்வானை காணி மற்றும் வீட்டை பறிமுதல் செய்யுமாறு கோரி இன்று காலை பூகொட நீதவான் நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பதற்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு ஆயத்தமாகுவதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

குறித்த காணி தொடர்பில் பூகொட நீதிமன்றில் தற்போது வரையில் வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு பல முறை பசில் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தியுள்ளது.

இது தொடர்பில் இதற்கு முன்னர் பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டு பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதென கூறப்படும் கடுவெல மற்றும் மாத்தறை பிரவுன்சிலில் அமைந்துள்ள இடமும் அரசாங்கத்திற்கு பறிமுதல் செய்வதற்கு இதற்கு முன்னர் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE