நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 436 பேர் H.I.V தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக, நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 436 பேர் H.I.V தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் தொற்றினால் 394 பேர் மரணமடைந்ததற்கான பதிவுகள் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
நேற்று பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவ்வாறு நாடளாவிய ரீதியில் 631 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எயிட்ஸ் நோயினால் 2011ஆம் ஆண்டில் 32 பேரும், 2013இல் 30 பேரும், 2014இல் 27 பேரும், 2015இல் 31 பேரும் மரணித்துள்ளனர்.
இவ்வாறு H.I.V தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட் காலத்தை அதிகரிக்கச் செய்வதற்கு மருத்துவ மட்டத்தில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, H.I.V பரவுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும்,
பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போதும், அரச சேவைகளுக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் போதும் H.I.V சோதனை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.