வீட்டுக்குள் மலைப்பாம்பு – பதற்றத்தில் மக்கள்

240

ஹிக்கடுவ பகுதியிலுள்ள வீடொன்றில் பெரிய மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது.

திரானாகம பகுதியிலுள்ள வீட்டிலிருந்த நாய்களை சாப்பிடுவதற்கான இந்த பாம்பு வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் இரவு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்று பார்க்கும் போது பாரிய அளவிலான மலைப் பாம்பை கண்டுள்ளார்.

பின்னர் அவர் பிரதேச மக்களுடன் இணைந்து குறித்த பாம்பினை பிடித்துள்ளார்.

இது தொடர்பில் ஹிக்கடுவ வனவிலங்கு அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகளை பாம்பினை பிடித்து, காலி கொட்டாவ காட்டில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் காட்டுக்குள் இருக்கவேண்டிய மலைப்பாம்பு வீட்டுக்குள் வந்ததால் அப்பிரதேச மலைத்துள்ளனர்.

image

SHARE