விஜய் நடிப்பில் பரதன் இயக்கும் பைரவா படத்தை ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். தற்போது இந்த படத்தை பற்றிய சூப்பர் ஹைலைட்ஸ் இதோ
கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த படம் உருவாகிறது.
எஸ்.ஏ.சியின் பரிந்துரையில் தான் பாப்ரி கோஷ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.
தனி பஞ்ச் வசனம் வேண்டாம், பேசுகிற வசனங்களே பஞ்ச் வசனமாக இருக்க வேண்டும் என்று விஜய் கூறியிருக்கிறாராம்.
கிராமத்து இளைஞன், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் என இரண்டு கெட்டப்புகளில் விஜய் நடிக்கிறார். ஆனால் இது இரண்டு வேடமா என்பது டுவிஸ்ட்.
மைம் கோபியை படத்தில் இணைத்தது பரதன் விருப்பம்.
இந்த படத்தில் விஜய் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தின் கேரள உரிமை சுமார் ஆறு கோடிக்கு மேல் பிஸினஸ் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.