கடந்த ஒரு மாதக்காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட, இந்திய வர்த்தக இராஜாங்க அமைச்சர் நிர்மலா சித்தாராமனின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 27ஆம் திகதி அவர் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை சந்தித்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த சந்திப்பில், இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கை (எட்கா) தொடர்பில் கலந்துரையாபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.