இந்த உணவோடு இதெல்லாம் சேர்த்து சாப்பிடாதீங்க

252

download

உணவுகளை அளவுக்கு மீறி நாம் சாப்பிடும் போது அந்த உணவே நமக்கு விஷமாகும்.

இதனை தான் ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஒரு சில உணவுகளை ஒருசேர ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

  • தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது, இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.
  • வாழைப்பழத்தைத் தயிர் அல்லது மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது.
  • பழங்களை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் பழங்களில் உள்ள அதன் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்காமல் போய்விடும்.
  • வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் காய்கறியின் சத்துகள் நமக்கு கிடைக்காது.
  • மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. இதனால் வெண்மேகம் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது.
  • தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளை, ஆஸ்துமா மற்றும் சளி அதிகம் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • மூல நோய் இருப்பவர்கள் முட்டை, அதிக காரம் மற்றும் மாமிச உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
  • நெய்யை வெண்ணெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீரை குடித்த பின்பு தான் காபி, டீ போன்ற பானங்களை குடிக்க வேண்டும்.
  • அல்சர் மற்றும் மஞ்சள் காமாலை உள்ளவர்கள், மிளகாய் மற்றும் ஊறுகாய் போன்ற காரமான உணவுகளை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
  • பெண்கள் அளவுக்கு அதிகமாக தங்களுடைய உணவுகளில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக் கூடாது.
  • தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.
  • கோதுமை மாவில் செய்து சாப்பிடும் உணவுகளை நல்லெண்ணெயுடன் சேர்த்து சமைத்து சாப்பிடக் கூடாது.
  • மூட்டுவலி மற்றும் வாத நோய் உள்ளவர்கள், அசைவ உணவுகள், கிழங்கு வகைகள் மற்றும் முட்டை போன்ற உணவுகளை சாப்பிடாமல் முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.
SHARE