இது வரைக்காலமும் புதிய கட்சி ஆரம்பிக்கப்படாது சுதந்திரக்கட்சியே எமது உயிர், உண்மையான சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் நாம் என கூறிவந்தார் மஹிந்த.
தற்போதைய நிலவரப்படி அவருடைய அரசியல் வாழ்வு தடுமாறிப்போயிள்ள நிலையில் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் கட்சியின் சின்னம் போன்றவை அறிமுகப்படுத்தி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் மஹிந்த கடந்த காலத்தில் தன் மூலமாகவும் தன் குடும்பம் மூலமாகவும் ஒரு வகை மக்கள் செல்வாக்கை சேர்த்து வைத்திருந்தார். அவர் மீது எத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அவருக்கென்று மக்கள் மத்தியில் ஒரு தனிக்கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது.
அந்தக் கூட்டம் காரணமாக தற்போது அவரால் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும் போது தற்போதைய ஆட்சிற்கு போட்டியும் புதிய தலையிடியும் ஏற்படும் என்பது உண்மையே.
அதன் காரணமாக அவரை திசைதிருப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இங்கு இது வரையிலும் மறைமுகமாக தாக்கிக் கொண்டு வந்த ரணில் தலைமை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் தாக்க முற்படுவதாக கருத்துகள் வெளிவரத் தொடங்கியுள்ளது.
முன்னைய மஹிந்த ஆட்சியின் போது பொன்சேகா அவருக்கு முக்கிய நபராக இருந்தார் எனினும் எக்காரணத்திற்காகவோ அவர் மஹிந்தவிடம் இருந்து விலக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார்.
தற்போதைய ஆட்சியில் மஹிந்த தரப்பு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் அவர் மீது பெயர் குறிப்பிட்டு எவரும் முறைகேடாக குற்றச்சாட்டினை முன்வைக்கவில்லைதற்போது பொன்சேகா அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்.
பொன்சேகாவிற்கு பதவி கிடைத்து நீண்ட நாட்களின் பின்னர் அவர் தற்போது மஹிந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றங்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அவர் மஹிந்தவினால் தண்டிக்கப்பட்ட போது கூட பொறுமை காத்தார் ஆனால் தற்போது பகிரங்கமாக கருத்து வெளியிடுகின்றார் அண்மைய பாராளுமன்றம் இதனை உறுதிப்படுத்தியது. இங்கு அவர் ரணில் மைத்திரியின் தூண்டுதலின் பேரிலேயே இயக்கப்பட்டு வருவதாக நோக்குனர்கள் தெரிவிக்கின்றனர்.
பொன்சேகா வெளிப்படையாக மஹிந்தவை குற்றச்சாட்டும் போது அவரை கைது செய்ய அல்லது விசாரணைக்கு உட்படுத்தி விட முடியும் மஹிந்தவின் பக்க பலமாக இருந்த ஒருவரே பொன்சேகா. மஹிந்த பற்றிய முழு விபரம் பொன்சேகாவிடம் இருக்கும்.
அதே வேளை தற்போது விடுதலைப்புலிகள் கருத்துகளை முன்வைத்து மஹிந்த செல்வாக்கு தேடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் போது மக்கள் செல்வாக்கு அவருக்கு அதிகமாக கிடைத்து விடும் இதனை தடுக்க முன்னாள் படைத்தளபதியை உசுப்பேற்றி விட்டால் யுத்த செல்வாக்கை உடைத்து விட முடியும்.
இதற்கான படிகளாகவே போர்க்குற்றங்களை பற்றிய கருத்துகள் அதிகளவாக தற்போது கூறப்பட்டு வருகின்றது பொன்சேகாவும் புத்தகம் வெளியிட முனைகின்றார்.
இவை அனைத்திற்கும் பின்னால் ரணில் தரப்பே இருந்து செயற்பட்டு வருவதாக அரசியல் நோக்குனர்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை பொன்சேகா மஹிந்தவிடம் இருந்து விலகி வந்த பின்னர் ரணில் அவருக்கு அடைக்கலம் தந்து பதவி கொடுத்து தன் பக்கம் வைத்து கொண்டு வந்தது இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலைக்காக அவர் தேவைப்பட்டதற்காகவே என கூறப்படுகின்றது.