பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்த்துக்கொள்ளும் வேளையில் அதிபர்கள் நிதி மற்றும் பாலியல் இலஞ்சம் கோருபவர்கள் தொடர்பில்1954 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக தெரியப்படுத்த விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அரச பாடசாலையில் பிள்ளைகளை தாம் சேர்க்க செல்லும் வேளைகளில் நிதி மற்றும் பாலியல் இலஞ்சம் கோருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியத்தினை அடுத்து குறித்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குறித்த இயக்கத்தின் ஊடாக தெரியப்படுத்த முடியும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.