இரவில் யால சரணாலயம் செல்லும் அமைச்சர்

250

31630

யால தேசிய சரணாலயம் தற்பொழுது மூடப்பட்டுள்ளது. எனினும், பிரபல அமைச்சர் ஒருவர் இரவில் இரகசியமாக குறித்த சரணாலயத்துக்கு சென்று வருவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சாணக இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 வீதமானோர் தென் மாகாணத்திற்கு செல்லாமல் போக மாட்டார்கள். யால சரணாலயமே இதற்கு காரணம்.

எனினும், குறித்த சரணாலயம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு 9 மணி மற்றும் அதிகாலை 3 மணிக்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் இந்த சரணாலயத்துக்கு சென்று வருகின்றார்.

இந்நடவடிக்கை புதையல் வேட்டை ஆரம்பமா என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பொது மக்களுக்கு யால தேசிய சரணாலயத்தை பார்வையிடுவதை தடுத்து அமைச்சர் என்ன செய்கிறார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE