லங்கையிலிருந்து படித்தவர்கள் வெளியேறுவதை தடுப்பதன் மூலம் அறிவின் அடிப்படையிலான பொருளாதாரம் நோக்கி பயணிக்க முடியும்! ரணிலின் அதிரடி முடிவு

224

625-256-560-350-160-300-053-800-461-160-90

இலங்கையிலிருந்து படித்தவர்கள் வெளியேறுவதை தடுப்பதன் மூலம் அறிவின் அடிப்படையிலான பொருளாதாரம் நோக்கி பயணிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இன்று பலமான நாடாக மாறியுள்ளது ஏன்? சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவை விடவும் அதிகமாகும். இதனை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன.

அறிவுடைய எந்தவொரு நபரையும் எங்களுடைய நாட்டிற்கு எடுத்துக் கொள்வோம் என்ற கொள்கையில் அவர்கள் செயற்படுகின்றனர். இதனாலே அவர்கள் முன் செல்கின்றனர். இவை தொடர்பில் அறிவுதிறன் கொண்ட இலங்கையர்களை இந்த நாட்டில் வைத்துக் கொண்டு தொழிநுட்ப ரீதியிலான நிறுவனங்களை உருவாக்கி முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டும்.

தொழிநுட்பம் என்பது அவ்வளவு எளிதான விடயம் அல்ல. அதனை ஆரம்பிக்க வேண்டும். பேஸ்புக் உருவாகும் என கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் நாம் சிந்தித்தோமா? நாங்கள் புதிய முறையில் சிந்திக்க வேண்டும். சாரதி அற்ற வாகனங்கள் இன்று காணப்படுகின்றது. பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இந்த கருத்துக்களில் நூற்றுக்கு ஒரு சதவீத புள்ளி வளர்ச்சியடைந்து பணக்கார முதலாளித்துவ நிறுவனங்கள் உருவாகின்றது.

சிறிய யோசனைகளும் எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹோமாக, பிட்டிபன புதிய தொழில்நுட்ப நகரத்தில் அடிக்கல் நாட்டு நிகழ்வில் நேற்று கலந்து கொண்ட போது பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

சமகால அரசாங்கத்தில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

ஐந்தாண்டுகளில் பத்து இலட்சம் வேலைவாய்ப்பு, வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்குதல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, எல்லோருக்கும் இணையம் என பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

SHARE