கீர்த்தி சுரேஷ் பற்றி தெரியாத சில சுவாரஸ்ய விஷயங்கள்

268

கோலிவுட்ல இப்ப டாப்பா கலக்கிட்டு வராங்க கீர்த்தி சுரேஷ். ஆனா இவங்கள பத்தி நிறைய பேருக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. அதனால வாங்க அவங்கள பத்தி முழுசா பாப்போம்.

இவங்க ரஜினியோட கிளாஸ் படமான நெற்றிக்கண் படத்தில் நடித்த மேனகாவின் மகள். முதன்முதலாக இவங்க மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான கீதாஞ்சலி படத்தில் அறிமுகமானாங்க.

குழந்தை பருவத்தில் கீர்த்தி ஒரு நீச்சல் வீராங்கனையாக இருந்தார். நடிப்பை தவிர ஃபேஷனில் அதிக ஆர்வம் கொண்டதால் ஸ்காட்லாந்தில் ஃபேஷன் துறை படிப்பு படித்ததோடு லண்டனில் Internship சென்றுள்ளார். இதனால் இவருக்கு ஒரு ஃபேஷன் கடை துவங்க வேண்டும் என்பது பெரிய ஆசை.

இவங்க விஜய், சூர்யாவோட மிகப்பெரிய ரசிகையாம். பள்ளி, கல்லூரிகளில் நாடகம், நடனம் போன்றவற்றில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார்.சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக Pilots என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதுதவிர கிருஷ்ணாகிருபா, சந்தான கோபாலம் போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார்.கார்டியோ பயிற்சிகள் செய்வதில் ஆர்வம் கொண்ட இவர் யோகா பயிற்சிகளிலும் ஈடுபடுவாராம். கீர்த்தி சுரேஷிற்கு காய்கறி உணவு எடுத்துக் கொள்வதில் அவ்வளவு பிரியம்.

SHARE