இலங்கையில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் மிகவும் விலை உயர்ந்த கார் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

325
இலங்கையில் அதிக பெறுமதியான கார் இறக்குமதி

இலங்கையில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் மிகவும் விலை உயர்ந்த கார் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரின் பெறுமதி சுமார் 158 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

வாகன இறக்குமதி தீர்வையாக மட்டும் 93 மில்லியன் ரூபா செலுப்பட்டுள்ளது. சுங்கத் தீர்வை செலுத்தப்பட்ட வாகனம் நேற்றைய தினம் துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பிரபல வர்த்தகர் ஒருவரினால் இந்த வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதனிலை ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ரொயஸ் ரக காரே இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

SHARE