முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அரசியலுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.-எஸ்.பீ திஸாநாயக்க

232

wigneswaran

வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அரசியலுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழில் இடம் பெற்ற “எழுக தமிழ்” பேரணியின் போது வடக்கில் உள்ள சிங்கள குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலைகளை அகற்றுமாறும் விக்னேஸ்வரன்பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

இந்த கருத்திற்கு பதிலளிக்கும் போதே திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் வளர்ச்சியடையாத ஒரு குழந்தையே விக்னேஸ்வரன், அரசியலுடன் விளையாடிக்கொண்டிருக்கும் விக்னேஸ்வரன் நிஜ வாழ்வில் ஒரு வெற்று நபர் வெற்று கோப்பை என திஸாநாயக்க மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விடுதலை புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் ”லொக்கு அப்பாச்சியாக” இருக்க விக்னேஸ்வரன் ஆசைப்படுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்காக போராடுவோர் என தன்னை சித்தரித்துக் கொள்ளவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுகின்றார் என வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க கூறியுள்ளார்.

SHARE