பிரபாஸ் பிறந்த நாளில் வெளிவரும் பாகுபலி டீசர்

238

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபாஸ், ரானா, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாகுபலி படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம்.

இந்நிலையில் பாகுபலி படத்தின் டீசர் நாயகன் பிரபாஸின் பிறந்த நாளான அக்டோபர் 23ல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறைவு பெற்ற பின்னர் விஷுவல் எஃபெக்ட் பணிகளுக்கு மட்டும் ஐந்து மாதங்கள் தேவைப்படும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அறிவித்த படி 2017 ஏப்ரல் 28ல் வெளிவரும் என்று இயக்குனர் ராஜமௌலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

SHARE