இந்திய கிரிகெட் வீரர் மகேந்திர சிங் டோனி காதலை தெரிவித்த இளம் பெண்ணின் செயலால் வெட்கப்பட்டு கையை வைத்து முகத்தை மூடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இந்திய அணியின் ஒரு நாள், டி20 தொடர்களின் தலைவரான டோனி ஆரம்பகாலத்தில் இந்திய அணிக்கு அடி எடுத்து வைக்கும் போது அவருடைய சில சுவாரஸ்யமான வீடியோக்கள் சமூகவலத்தளங்களில் உலா வருகின்றன.
அதில் இலங்கை, இந்திய அணிகளுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தின் போது இலங்கையைச் சேர்ந்த ரசிகை ஒருவர் டோனி உன்னை காதலிக்கிறேன் என்று ஒரு சிறிய காகிதத்தில் எழுதி கமெராவில் காட்டினார்.
இதை வீரர்கள் அமர்ந்திருக்கும் அறையில் இருந்த டோனி கம்யூட்டரில் கண்டு வெட்கப்பட்டு தன்கையை வைத்து முகத்தை மூடியுள்ளார். அதைத் தொடர்ந்து டோனி தன் மகளுடன் செய்த குறும்பு சேட்டைகள், புல்லாங்குழல் வாசிப்பது, தனது நேர்த்தியான திறமைகளால் எதிரணி வீரர்களை வீழ்த்துவது என பல அந்த வீடியோவில் உள்ளது.