மண்ணை கவ்விய இலங்கை. புதிய வரலாறு படைத்த அவுஸ்திரேலியா

530

625-500-560-350-160-300-053-800-748-160-70-13

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா புதிய சாதனை படைத்துள்ளது.

இலங்கை, அவுஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதிய டி20 போட்டி கொழும்பில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 59 ஓட்டங்களே எடுத்தது.

8 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ஓட்டங்களே எடுக்க, அதிகபட்சமாக மடுஷனி 17 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலியா தரப்பில், கிறிஸ்டின் பீம்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா 8.1 ஓவரிலே 63 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. பெத் மூனி 29 ஓட்டங்களும், விலானி 34 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதன் மூலம் சர்வதேச மகளிர் டி20 போட்டியில் அதிக பந்துகள் (71 பந்துகள்) மீதருக்கும் நிலையில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை அவுஸ்திரேலியா படைத்துள்ளது.

இதற்கு முன்னர் நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 70 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றிருந்தது.

SHARE